












விருதுநகர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் – 2022
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கிளோ ஸ்கேட்டிங் மைதானத்தில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி மற்றும் மாநில அளவிலான தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
இப்போட்டியை விருதுநகர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் திரு.நந்த கோபால் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு
லியோ பைன் ஆர்ட்ஸ் நிறுவன தலைவர் திரு. M. ரவீந்திரன் அவர்கள்
பதக்கங்களை வழங்கினார்.